பறிபோகுமா டயனாவின் எம்.பி. பதவி? அழைப்பாணை விடுத்தது நீதிமன்றம்.
இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, இராஜாங்க அமைச்சர் டயனா கமகே உள்ளிட்ட பிரதிவாதிகளை எதிர்வரும் டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரதிவாதியான டயனா கமகேவின் இரட்டைக் குடியுரிமை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய குழு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.