கடும் காற்றுடன் ஆலங்கட்டி மழை 30 இற்கு மேற்பட்ட வீடுகள் சேதம்

வவுனியாவில் கடும் காற்றுடன் ஆலங்கட்டி மழை: 30 இற்கு மேற்பட்ட வீடுகள் சேதம்
வவுனியாவில் கடும் காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழை காரணமாக இரு ஆலயங்கள் மற்றும் 30க்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.
நேற்று பிற்பகல் வவுனியா, கணேசபுரம் பகுதியில் பெய்த ஆலங்கட்டி மழையின் போது கடும் காற்று வீசியுள்ளது.
இதனால் 30 இற்கும் மேற்பட்ட வீடுகளினின் கூரைகள் காற்றினால் தூக்கி வீசப்பட்டுள்ளதுடன், மழை நீர் வீடுகளுக்குள் புகுந்து மக்களின் உடமைகளும் நாசமடைந்துள்ளன. அத்துடன் இரு ஆலயங்களும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.