“ஆன்லைன் சூதாட்டம் – சிறுவர்களை தடுப்பது பெற்றோர் பொறுப்பு” – உயர்நீதிமன்றம்!
நெல்லை பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த அய்யா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், இணையம் மூலம் விளையாடப்படும் ஆன்லைன் சூதாட்டம், விளையாட்டு, லாட்டரி உள்ளிட்ட இணையதள விளையாட்டுகளில் சிறுவர்கள், மாணவர்கள் விளையாடுவதை தடை செய்யும் வகையில், விளையாட அனுமதிப்பதற்கு முன் அவர்களின் ஆதார் எண்ணை பதிவு செய்த பிறகு 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டும் ஆன்லைன் விளையாட்டுகளை விளையாட அனுமதி வழங்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கூறியிருந்தார்.
மேலும், ஆன்லைன் சூதாட்டம், லாட்டரி, இணைய உலகில் வளர்ந்து வரும் அபாயத்தை காட்டுகிறது. இணைய சூதாட்டத்திற்காக செலவிடப்படும் செலவுகள் பிற செலவுகளோடு ஒப்பிடும்போது மிக அதிகம்.
அதே நேரத்தில் வெற்றி பெறுவதற்கான எந்த நல்ல முகாந்திரமும் இல்லை. இது ஒரு கணிப்பு உண்மை . இந்தியாவில் 10CRIC. , Betway, PariMatch, Pure Win, Megapari, 22Bet, ComeOn!, BetWinner, abet, Bet365, Casinos, Bovada, Las Atlantis, Super, Betoo, I, Betoo, போன்ற சில அப்ளிகேஷன்கள் முதலிடம் வகிக்கின்றன.
Red Dog, Café Casino இந்த கேம்கள் தங்கள் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கு வருவோரை போனஸுடன் வரவேற்கின்றன. இதனால் நிறைய இளைஞர்கள் , அடிமையாவதற்கு கவர்ச்சிகரமான, மர்மமான ஒரு காரணியாக உள்ளது. எனவே இளம் டீனேஜ் குழந்தைகளை சூதாட்டத்தில் இருந்து தடுக்க சட்டம் மற்றும் ஒழுங்குமுறைகளை செயல்படுத்த வேண்டும். இதற்கு நேரடியான மற்றும் உடனடி தீர்வு தேவை எனவும் கூறியிருந்தார்.
இந்நிலையில், இந்த மனு நீதிபதிகள் R.மகா தேவன், J.சத்தியநாராயணா பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள், இன்றைய நிலையில், அனைவரிடமும் இன்று ஸ்மார்ட் போன் உள்ளது. ஆன்லைன் சூதாட்டத்தில் சிறுவர்கள், மாணவர்கள் பங்கேற்காமல் இருப்பதை சிறுவர்களின் பெற்றோர்கள்தான் பொறுப்புடன் பார்த்து கொள்ள வேண்டும்.
பெற்றோர்களுக்கு தான் பொறுப்பு அதிகம் உள்ளது என கருத்து தெரிவித்த நீதிபதிகள், மனுதாரர் கோரிக்கை குறித்து மத்திய நிதி துறை மற்றும் தகவல் ஒலி பரப்பு துறை செயலாளர்கள் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் வழக்கு விசாரணை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.