வடக்கில் இ.போ.ச. சேவை இன்று முழுவதும் முடக்கம்!

தமது சக ஊழியர் தாக்கப்பட்டமைக்கு நீதி கோரியும், தமது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தியும் இலங்கைப் போக்குவரத்துச் சபையின் யாழ். சாலையினரால் நேற்று முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வடக்கு மாகாணத்திலுள்ள 7 சாலைகளின் ஊழியர்களும் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுகின்றனர்.
இதனால் வடக்கு மாகாணத்தில் இலங்கைப் போக்குவரத்துச் சபையின் எந்தவொரு சேவைகளும் இன்று இடம்பெறவில்லை.