யாழில் ஊசி மூலம் ஹெரோய்ன்: 15 வயது மாணவன் பரிதாபச் சாவு.

யாழ்ப்பாணத்தில் ஊசிமூலம் உயிர்கொல்லி ஹெரோய்ன் பயன்படுத்திய 15 வயது பாடசாலை மாணவன் ஒருவர் மூளை மற்றும் இதயத்தில் கிருமித்தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
இவருடன் சேர்த்து இந்த ஆண்டு 13 பேர் உயிர்கொல்லி ஹெரோய்ன் பாவனையாளர்கள் யாழ்ப்பாணத்தில் உயிரிழந்துள்ளனர்.
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியொன்றில் வசிக்கும் 15 வயது மாணவன் கடும் காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் கடந்தவாரம் சேர்க்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சைப் பிரிவில் வைத்து சிகிச்சையளிக்கப்பட்டபோதும் நேற்று அந்த மாணவன் உயிரிழந்துள்ளார்.
மாணவனின் சடலத்தை நீதிவான் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்டார்.
உயிர்கொல்லி ஹெரோய்னை ஊசிமூலம் இந்த மாணவன் பயன்படுத்தி வருகின்றமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.