ரயிலுடன் மோதி தீப்பற்றிய ஓட்டோ; ரஷ்யப் பெண் உட்பட 2 பேர் மரணம்!

ஓட்டோ ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ரஷ்யப் பிரஜையான பெண் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
காலி மாவட்டம், ஹபராதுவ, தலவெல்ல – மஹரம்ப ரயில் கடவைக்கு அருகில் இன்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில் 62 வயதான ஓட்டோ சாரதியும், ரஷ்யப் பிரஜையான பெண்ணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
குறித்த பெண் தனது பிள்ளையை முன்பள்ளிக்கு அனுப்பிவிட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்தபோதே விபத்துக்குள்ளாகியுள்ளார்.
மேற்படி ரயில் கடவையில் உள்ள கடவை தடுப்பு இயங்கவில்லை என்றும், அது தொடர்பில் வாகனச் சாரதிகளுக்கான எச்சரிக்கை காட்சிப்படுத்தப்பட்டிருந்த நிலையிலேயே இந்ச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தின் பின்னர் ஓட்டோ தீப்பற்றி எரிந்துள்ளது என்றும் பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.