அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டனுக்கு கொரோனா.

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டனுக்கு (வயது 76) கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அவர் நேற்று முன்தினம் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “எனக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.

எனக்கு லேசான அறிகுறிகள் உள்ளன. மொத்தத்தில் நான் நன்றாக உள்ளேன்” என தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு கிளிண்டன், சிறுநீர்ப்பாதை தொற்றால் பாதிக்கப்பட்டு, அது ரத்தத்தில் கலந்து விட்டதால் அவதிப்பட்டு, ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சைக்குப்பின்னர் குணம் அடைந்தது நினைவுகூரத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.