கல்விச் சுற்றுலா சென்றிருந்த மாணவன் நீச்சல் தடாகத்தில் இருந்து சடலமாக மீட்பு!

நீச்சல் தடாகத்தில் இருந்து 15 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வென்னப்புவ, பொரலஸ்ஸவிலுள்ள ஹோட்டல் ஒன்றின் நீச்சல் தடாகத்தில் இருந்தே மாணவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் இன்று தெரிவித்தனர்.
குறித்த மாணவன் கலகெதர பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும், சந்தலங்காவ பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 10 இல் கல்வி கற்று வந்தவர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
மாகந்துறையில் உள்ள தனியார் வகுப்பில் இருந்து 80 பேர் கொண்ட பாடசாலை மாணவர்கள் சுற்றுலா சென்றிருந்த வேளையில், சக மாணவர்களுடன் குறித்த மாணவன் நீச்சல் தடாகத்தில் நீராடிய போதே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது என்றும் பொலிஸார் கூறினர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.