பொதுத்தேர்தல் நடந்தால் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது!
தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நடந்தால் பெரும்பான்மை ஆசனங்கள் எந்தக் கட்சிக்கும் கிடைக்காது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“இப்போதைய நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் ஒன்று நடத்தப்பட்டால் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை கிடைக்காது. 80 ஆசனங்களை எந்தவொரு கட்சியும் எடுக்காது.
இருக்கின்ற மிகுதி இரண்டு வருடங்களுக்குள் ஏற்படும் சில மாற்றங்கள் இந்த எண்ணிக்கையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது கோட்டாபய ராஜபக்சவுக்கு வழங்கிய 69 இலட்ச வாக்குகளில் பெரும் பகுதி ‘மொட்டு’க்கு எதிராகவே உள்ளது” – என்றார்.