போரில் காணாமல் போனோர் தொடர்பான விசாரணை பணிகள் ஆரம்பம்.
யுத்தத்தின் போது காணாமல் போனவர்கள் தொடர்பில் கண்டறிய அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்பட்ட அலுவலகத்தின் அதிகாரிகள் கிளிநொச்சி மக்களிடம் தகவல்களை கேட்கும் பணியை நேற்று (4) முதல் ஆரம்பித்துள்ளனர்.
காணாமற்போனதாக தெரிவித்து உற்றார் உறவினர்கள் குறித்த தகவல்களை அலுவலகத்தில் சமர்ப்பிக்க அதிகளவிலான மக்கள் வருகைதந்தமையால் அவர்களுக்கு இலக்கம் மற்றும் மீண்டும் அலுவலகம் வருவதற்கான திகதியும் வழங்கப்பட்டு ஆரம்ப நாளில் 60 பேரின் தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த அரசாங்கம் யுத்தத்தின் போது காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்த விசேட ஆணைக்குழுவொன்றை நியமித்ததுடன், யுத்தத்தின் போது காணாமல் போன 16000 பேர் தொடர்பிலான அறிக்கையை அந்த ஆணைக்குழு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தமை குறிப்பிடத்தக்கது.