இந்து அறநிலைய துறைக்கு எதிர்ப்பு : அரைநிர்வாண கோலத்தில் மனு அளிக்க வந்த சாமியாரால் பரபரப்பு

கோவை வெள்ளியங்கிரி மலைகோவில் உண்டியல் ஏலம் மற்றும் கடைகளை தனியார் வசம் தர அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உண்டியல் ஏலத்தை தனியார் வசம் அளித்த இந்து சமய அறநிலை கண்டித்து மாவட்ட ஆட்சியர் வளாகம் முன் அரை நிர்வாண கோலத்தில் சாமியார் ஒருவர் சங்கு ஊதி எதிர்ப்பை காட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அடுத்த வெள்ளியங்கிரி மலை மீது சுயம்புவாக சிவலிங்கம் உள்ளது. இங்கு வருடம் தோறும் சிறப்பு தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சிவனை தரிசனம் செய்வார்கள். இந்நிலையில் மலைகோவில் உண்டியல் ஏலம் மற்றும் கடைகளை தனியார் வசம் தர அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரசின் இந்த ஆணை பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த அரசானையை எதிர்த்து செந்தில் குமார் என்ற சிவனடியார் உயர்நீதிமன்ற தீர்ப்பை அரசு அவமதித்தும் அரசுக்கு சொந்தமான கோவிலை தனியாருக்கு தாரை வார்க்கும் இந்து அறநிலை துறை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அரைநிர்வாண கோலத்தில் சங்கு ஊதி, உடுக்கை அடித்து மனு அளிக்க வந்ததால் மாவட்ட ஆட்சியர் பரபரப்புடன் காணப்பட்டது.