28,000 சத்துணவு மையங்களை மூட நடவடிக்கை? அமைச்சர் கீதாஜீவன் விளக்கம்!

தமிழ்நாட்டில் 28,000 சத்துணவு மையங்களை மூட அரசு திட்டமிட்டுள்ளதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என்று சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் தற்போது செயல்படும் 43,190 சத்துணவு மையங்கள் மூலம் 46 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.
இதில், 28,000 மையங்களை மூட அரசு திட்டமிட்டுள்ளதாக செய்தி வந்துள்ளதாகவும், சத்துணவு மையங்களை மூடும் எண்ணம் அரசுக்கு அறவே கிடையாது என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
சத்துணவு மையங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பவும், மாணவர்களுக்கு சத்தான உணவை முறையாக வழங்கவும், தொடர் கண்காணிப்பை வலுப்படுத்தவுமே அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.