பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதான வசந்த மற்றும் சிரிதம்ம தேரருக்கு பிணை

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான அழைப்பாளர் கல்வெவ சிறிதம்ம தேரர் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சபையின் அழைப்பாளர் வசந்த முதலிகே ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களை கடுவெல நீதவான் நீதிமன்றில் இன்று (06) ஆஜர்படுத்திய பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள வசந்த முதலிகே மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.