செங்கல்பட்டு: சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கொடூர விபத்து – 6 பேர் பலி!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே ஜானகிபுரம் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டு வந்த லாரி மீது மினி சரக்கு வாகனம் மோதிய விபத்துக்குள்ளானது. இந்த கொடூர விபத்தில் மினி சரக்கு வாகனத்தில் இருந்த ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
படுகாயம் அடைந்த 4 நபர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்தும் சரக்கு வாகனத்தில் பயணம் செய்தவர்கள் குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்