மாண்டஸ் புயல் எதிரொலி.. 6 மாவட்டங்களில் பேருந்து சேவை ரத்து!

மாண்டஸ் புயல் காரணமாக 6 மாவட்டங்களில் நாளை அரசுப்பேருந்து சேவை ரத்து செய்யப்படுகிறது.
மாண்டஸ் புயல் தமிழகத்தை நெருங்கிக் கொண்டிருப்பதன் காரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று காலையில் இருந்து சாரல் மழை பெய்து வருகிறது. அதோடு காற்றின் வேகம் வழக்கத்தை விட அதிகமாக சுழன்று அடித்துக் கொண்டு இருக்கிறது.
இந்த மோசமான வானிலை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் நாளை இரவு நேர பேருந்து சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.