மாண்டஸ் புயல் எங்கே இருக்கிறது? ரெட் அலெரட் எப்போது வரை? கரையை கடப்பது எப்போது? – பாலசந்திரன் விளக்கம்

மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் தென்மண்டல வானிலை ஆய்வுமைய இயக்குனர் பாலசந்திரன் நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டியளித்தார். அப்போது மாண்டஸ் புயல் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு அவர் விளக்கமாக பதில் அளித்தார்.

கேள்வி : மாண்டஸ் புயல் தற்போது எங்கே மையம் கொண்டுள்ளது?

பதில் : காலை 10 மணி நிலவரப்படி சென்னை தென் கிழக்கே 280 கி.மீ தொலைவில் உள்ளது. மணிக்கு 13 கி.மீ என்ற வேகத்தில் நகர்ந்து வருகிறது. தொடர்ந்து வடமேற்கு திசையில் நகரக்கூடும். மாண்டஸ் புயல் இன்று இரவு முதல் நாளை காலை புதுச்சேரி – ஸ்ரீஹரிகோட்டாவிற்கு இடையே மாமல்லபுரத்தில் கரையை கடக்கும்.

கேள்வி : தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள ரெட் அலெர்ட் எவ்வளவு நேரம் நீடிக்கும்?

பதில் : புயலின் தன்மையை தொடர்ந்து கண்காணித்து கொண்டிருக்கும். தற்போதைய நிலவரப்படி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்பபுரம் மாவட்டங்களில் ரெட் அலெர்ட் தொடரும். புயல் அருகில் வரும் போது மாற்றம் எப்படி நடைபெறும் என தெரியும்.

கேள்வி : காற்றின் வேகம் எப்படி இருக்கும்? குறிப்பாக கடலோர மாவட்டங்களில் காற்றின் வேகம் எப்படி இருக்கும்?

பதில் : வட கடலோர பகுதியில் மணிக்கு 50 முதல் 70 கி.மீ வரை காற்றுவீசும். மாலை நேரத்தில் காற்றின் வேகம் அதிகரித்து 80 கி.மீ வேகத்தில் காற்று வீசலாம். தென் தமிழக பகுதியில் அதிகபட்சமாக 60 கி.மீ வரை காற்றின் வேகம் இருக்கும்.

கேள்வி : சென்னையில் புயலின் நிலை மற்றும் காற்றின் வேகம் எப்படி இருக்கும்?

பதில் : சென்னையில் நேற்று முதல் மழை பெய்து கொண்டிருக்கிறது. தற்போது 5 செ.மீ வரை மழை பெய்துள்ளது. மிதமானது முதல் கனமழை பெய்யும் சூழல் உள்ளது.

கேள்வி : புயல் நேரத்தில் பொதுமக்களுக்கு நீங்கள் சொல்லும் அறிவுரை என்ன?

பதில் : மக்கள் தேவையில்லாமல் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். செல்ஃபி எடுக்கிறோம் என கடற்கரை பகுதிக்கு செல்ல வே்ணடாம். இதுப்போன்று இல்லாமல் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.