பிரபல பாடசாலை மாணவன் துப்பாக்கி ரவைகளுடன் கைது.

பிரபல பாடசாலை மாணவன் ஒருவர் துப்பாக்கி ரவைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கரந்தெனிய பிரதேசத்திலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 12 இல் கல்வி கற்கும் மாணவனே ரி – 56 துப்பாக்கிக்குப் பயன்படுத்தப்படும் 15 ரவைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலுக்கு அமைய வீட்டின் அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி ரவைகளைக் கைப்பற்றச் சென்ற போது, பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றத்துக்காக அவரது தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கரந்தெனிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த மாணவனுக்குத் துப்பாக்கி ரவைகள் எவ்வாறு கிடைத்தன? அவர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் தொடர்பைப் பேணி வந்தாரா? என்பவை தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.