ராஜபக்சக்களை மக்கள் வெறுக்கவே இல்லை; அடுத்த ஆட்சியும் ‘மொட்டு’ தலைமையிலேயே!
“நாட்டு மக்கள் ராஜபக்சக்களை வெறுக்கவே இல்லை. ராஜபக்சக்கள் நாட்டுக்கு அவசியம்.”
இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையிலேயே அடுத்த அரசு அமையும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
“தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசும், தேர்தல் ஆணைக்குழுவுமே முடிவெடுக்க வேண்டும். அந்தவகையில் தேர்தலை நடத்துவதற்கு நாம் இணக்கம். அடுத்த அரசு கூட மொட்டுக் கட்சி தலைமையிலேயே அமையும். உள்ளூராட்சி சபைத் தேர்தலிலும் எமக்கு வெற்றி உறுதி” – என்றார்.