பணம் கொடுத்து அமைச்சராகுவதற்கு ரணிலின் சகா முயற்சி!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நெருங்கிய சகாவான ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர் ரவி கருணாநாயக்க பணம் கொடுத்து அமைச்சுப் பதவியைப் பெறுவதற்கு முயற்சி செய்கின்றார் என்று அறியமுடிந்துள்ளது.
‘மொட்டு’க் கட்சியைச் சேர்ந்த தேசியப் பட்டியல் எம்பி ஒருவருக்குப் பணம் கொடுத்து அதிலிருந்து விலகவைத்து அதன் ஊடாக எம்.பியாவதற்கும் அமைச்சராவதற்கும் முயற்சி செய்கின்றார் என்று தெரியவந்துள்ளது.
இந்தத் தகவலை ‘மொட்டு’க் கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்சவே தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் தனது சகாக்களுடன் உரையாடிக்கொண்டிருக்குபோதே இதை அவர் கூறியுள்ளார் என்று தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.