ரணிலுக்கான ஆதரவை ஊடகங்கள் முன்னிலையில் பகிரங்கப்படுத்திய ராஜித!

“இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையைச் சமாளிப்பதற்கான வல்லமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இருக்கின்றது” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
எனவே, சர்வகட்சி அரசு அமைத்தேனும் அவருக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்றும் ஊடகங்கள் முன்னிலையில் அவர் கூறினார்.
2002 காலப்பகுதியில் சரிவைச் சந்தித்திருந்த பொருளாதாரத்தைக்கூட ரணில் விக்கிரமசிங்க மீட்டிருந்தார் எனவும் ராஜித சேனாரத்ன சுட்டிக்காட்டினார்.