வடக்கு ஆளுநருக்கு எதிராக சுமந்திரன் ஊடாக சீ.வீ.கே. வழக்குத் தாக்கல்!

தம்பாட்டில் நியதிச் சட்டங்களை ஆக்கி வர்த்தமானியில் பிரசுரித்த வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவின் நடவடிக்கைகு எதிராக வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் உயர்நீதிமன்றத்தில் தடைகேள் ஆணை மனு வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார.
வடக்கு மாகாண சபை இல்லாத காலத்தில் சட்ட வரம்பை மீறி ஆளுநர் தன்னிச்சையாக வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல் செல்லுபடியற்றது என உத்தரவிடக் கோரியே இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கையின் மேன்முறையீட்டு நீதிமன்றில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஊடாக நேற்று இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.