அவதார்: தி வே ஆஃப் வாட்டர் படம்
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் அவதார்: தி வே ஆஃப் வாட்டர்.
சுமார் ரூ. 2060 கோடி செலவில் உருவாகியுள்ள இப்படம் வருகிற 16ஆம் தேதி உலகளவில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.
இவ்வாறுஇருக்கையில், இப்படத்தின் பிரிமியர் ஷோ நேற்று திரையிடப்பட்டுள்ளது.இப் படத்தை பார்த்த முக்கிய பிரபலங்கள் சமூக வலைத்தளத்தில் அவதார்: தி வே ஆஃப் வாட்டர் படத்தின் விமர்சனம் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த அனைத்து விமர்சனத்திலும் படம் சிறப்பாக இருக்கிறது என்றும், மற்றொரு வெற்றியை ஜேம்ஸ் கேமரூன் பதித்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்கள்.
அத்தோடு விஷுவல் ட்ரீட்டாக அவதார் இருக்கிறது, படத்தின் கிளைமாக்ஸ் பிரமாதம், டெக்னிகளாகவும் படம் மிரட்டுகிறது என்று விமர்சனம் தெரிவித்துள்ளார்கள்.
மொத்தத்தில் படம் சூப்பர் என்று கூறியுள்ளனர்.
கடந்த 2009-ம் ஆண்டு 1000 கோடி ரூபாய் பொருட்செலவில் உலகம் முழுவதும் வெளியானப் படம் ‘அவதார்’. வரலாற்று சயின்ஸ் பிக்ஷனாக உருவான இந்தப் படம், சினிமா உலகை அடுத்த தளத்திற்கு கொண்டு சென்றது மட்டுமல்லாமல், வசூல் ரீதியாக சாதனை படைத்தது.இதையடுத்து இந்தப் படத்தின் சீக்குவல் எனப்படும், அடுத்தடுத்த பாகங்கள், குறிப்பிட்ட இடைவெளியில் வெளியாகும் என்று இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் கூறியிருந்தார்.
பிரம்மாண்டமான காட்சிகளுடன் 3டி தொழில்நுட்பத்தில் வெளிவந்துள்ள ‘அவதார்-தி வே ஆஃப் வாட்டர்’ திரைப்படம் உலகில் 160 மொழிகளில் ரிலீசாகியுள்ளது. அவதார் திரைப்படம் ஐந்து பாகங்களாக அடுத்தடுத்து வெளிவர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 13 ஆண்டுகள் கழித்து அவதார் படத்தின் 2-ம் பாகம் டிசம்பர் மாதம் 16-ம் தேதி வெளியாகி உள்ள நிலையில் இதன் மூன்றாவது பாகத்தை 2024-ம் ஆண்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.