உள்ளூராட்சி சபைத் தேர்தலைக் கோரும் மனுக்களை விசாரணைக்கு எடுக்க உயர்நீதிமன்றம் தீர்மானம்!
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி, நாடாளுமன்ற உறுப்பினர்களால் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, குறித்த இரண்டு மனுக்களையும் ஜனவரி மாதம் 18 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
உயர்நீதிமன்ற நீதியரசர்களான பிரியந்த ஜயவர்தன, குமுதுனி விக்ரமசிங்க மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோரினால் இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் ஆகியோரால் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மற்றைய மனு, எம்.பிக்களான தயாசிறி ஜயசேகர, லக்ஸ்மன் கிரியெல்ல, அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.