முல்லையில் சிறப்பாக நடைபெற்ற சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினம்.
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தினை முன்னிட்டு முல்லையில். பேரூந்துகளில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட ”சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்” முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்று(16) வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு சிறப்புற நடைபெற்றது.
இந் நிகழ்வு ஆரம்பிப்பதற்கு முன்னர் முல்லை. மாவட்ட பேரூந்து நிலையத்திலிருந்து மாற்றுத்திறனாளிகளால் கவனயீர்ப்பு பேரணி ஒன்றினை அரம்பித்து அங்கு தரித்துவைக்கப்பட்டிருந்த பேரூந்துகளில் ஸ்டிக்கர்கள் ஒட்டும் நிகழ்வு இடம்பெற்றது.
மாற்றுத்திறனாளிகளின் பொதுப் போக்குவரத்தின் போது இருக்கைகள் ஒதுக்கப்படவேண்டியதன அவசியத்தை வலியுறித்தி குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது ”இவ் ஆசனம் இயலாமையுடைய நபர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது” எனும் வாசகம் பொறிக்கப்பட்ட ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.
இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர்(நிர்வாகம்) க.கனகேஸ்வரன், மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் தசரதன், அரச சார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், மாற்றுத்திறனாளிகள் என பலரும் கலந்து கொண்டிருற்தனர்.