பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறப் போவது யார்?
சின்னத்திரை ரசிகர்களின் ஃபேவரட் என்டர்டைன்மென்ட் நிகழ்சியான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்ட உள்ளதால், சுவாரசியத்திற்கு பஞ்சமில்லாமல் விஜய் டிவியில் தினம் தோறும் ஒளிபரப்பாகிறது. இதில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் லிஸ்டில் இடம் பெற்றிருக்கும் 6 பேரில் யார் வெளியேற்றப்படுவார் என்பதை உறுதி செய்யும் ஓட்டிங் லிஸ்ட் தற்போது கடைசி நிமிடத்தில் அதிரடி ட்விஸ்ட் உடன் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே கடந்த வாரம் திடீரென்று ராம் மற்றும் ஆயிஷா இருவரையும் டபுள் எவிக்ஷன் செய்து வெளியேற்றினார்கள். ஆகையால் இந்த வாரத்திற்கான எவிக்சன் குறித்த பதட்டம் போட்டியாளர்களிடம் நிலவிவரும் நிலையில், நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் ஜனனி, ADK, மணிகண்டன், அசீம், விக்ரமன், ரக்ஷிதா உள்ளிட்டோருக்கு மக்கள் இந்த வாரம் முழுவதும் ஓட்டுக்களை வழங்கினார்கள்.
இதில் நிகழ்ச்சி துவங்கப்பட்ட நாளிலிருந்து இப்போது வரை பிக் பாஸ் வீட்டின் கலவரங்களுக்கு காரணமாக இருக்கும் அசீம், இந்த சீசனின் கண்டன்ட் கொடுக்கும் நபராக இருக்கிறார். ஆகையால் இவருக்கும் ரசிகர்கள் நல்ல சப்போர்ட் கொடுத்து, ஓட்டுக்களையும் வாரி வழங்கி உள்ளனர். ஆகையால் இந்த 6 பேரில் அசீமுக்கு தான் அதிக ஓட்டுகள் கிடைத்து முதலிடத்தில் இருக்கிறார்.
இந்த சீசனில் ஓரளவு நியாயம் பேசக்கூடிய நபராக இருக்கும் விக்ரமனுக்கு 2-ம் இடமும், சீசன் 6-ன் செம க்யூட்டான போட்டியாளராக வலம் வரும் ஜனனி 3-ம் இடமும், ஓட்டுக்களின் அடிப்படையில் ADK வுக்கு 4-ம் இடமும் கிடைத்திருந்தது. ஆனால் நேற்று நடைபெற்ற வாக்கு வாதத்தின் பின்னர் ADKயின் வாக்குகள் கணிசமாக வீழ்சியடையத் தொடங்கின. இதில் கடைசி இரண்டு இடங்களுக்கு மிகக் குறைந்த ஓட்டுக்களை பெற்றுள்ள ADK மற்றும் மணிகண்டன் இவர்களுக்கிடையே தான் கடும் போட்டி நிலவத் தொடங்கியுள்ளது.
இவர்களது ஓட்டு வித்தியாசம் மிக குறைவு தான். கம்மி ஓட்டின் அடிப்படையில் இந்த வாரம் இவர்கள் இருவரில் ஒருவர் வெளியேறப் போகிறார். அவர் யார் என்பது நாளை தெரிந்துவிடும்.