13 வருடமாக காக்க வைத்து புதிய உலகிற்கு கூட்டிச் சென்ற அவதார் 2..
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளிவந்த அவதார் திரைப்படம் உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. வித்தியாசமான தொழில்நுட்பங்களை கொண்டு வெளியான அந்த திரைப்படத்தின் அடுத்த பாகத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். கிட்டத்தட்ட 13 வருடங்களாக ரசிகர்களை காக்க வைத்த இந்த அவதார் 2 இன்று பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கிறது.
ஏற்கனவே இந்த படத்தின் அடுத்தடுத்த ட்ரெய்லர்கள் வெளியாகி ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தி இருந்தது. அதை மேலும் அதிகரிக்கும் வகையில் தற்போது திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் தங்கள் விமர்சனங்களை சோசியல் மீடியாவில் தெறிக்க விட்டு வருகின்றனர். அதிலும் ஒரு ரசிகர் தன்னுடைய கருத்தை மிக அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
அதாவது இந்த திரைப்படம் இத்தனை வருட தாமதமாக வெளிவந்ததுக்கு சரியான காரணமும் இருக்கிறது. ஏனென்றால் இப்படி ஒரு சிறந்த படைப்பை காண புதிதாக மனித கண்கள் உருவாக வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். உண்மையில் இப்படம் அப்படி ஒரு பிரமிப்பை தான் ரசிகர்களுக்கு கொடுத்திருக்கிறது.
மேலும் சில ரசிகர்கள் இப்படி ஒரு படத்தை ஜேம்ஸ் கேமரூனை விட வேறு யாராலும் சிறப்பாக கொடுத்து விட முடியாது என்று அவரை பாராட்டி வருகின்றனர். அது மட்டுமல்லாமல் படத்தின் விஷுவல் காட்சிகள், எமோஷனல், சென்டிமென்ட், கதை, திரைக்கதை, பின்னணி இசை என அனைத்துமே அபாரமாக இருப்பதாகவும் ரசிகர்கள் சிலாகித்து கூறி வருகின்றனர்.
இப்படி படத்தில் அனைத்துமே நிறைவாக இருக்க, குறை என்று சொல்வதற்கு சில விஷயங்களும் இருக்கிறது. அதாவது இந்த படத்தின் நீளம் கொஞ்சம் சலிப்பு தட்டும் வகையில் இருக்கிறது. படத்தில் ஆக்சன், விசுவல் என மிரட்டலாக இருந்தாலும் இந்த ஒரு விஷயம் தான் கொஞ்சம் அதிருப்தியை கொடுத்திருக்கிறது. அந்த வகையில் இந்த அவதார் 2 திரைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது. மேலும் ரசிகர்களும் இப்போது இப்படத்தை ஆர்வத்துடன் கண்டு களித்து வருகின்றனர்.