பாதாள குழுவினரை களைய உத்தரவு.
பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் உயர் அதிகாரிகளை அழைத்து, கொலைகள் மற்றும் போதைப்பொருள்களை ஒடுக்குவதற்கு அதிகபட்ச நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.
ஜனசக்தி குழுமத்தின் தலைவர் தினேஷ் ஷாப்டரின் கொடூரமான மற்றும் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பிலான விசாரணைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான பொலிஸ் விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பாக அமைச்சர் பொது பாதுகாப்பு அமைச்சுக்கு அதிகாரிகளை அழைத்திருந்தார்.
பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன, மேல் மாகாணங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன், பொலிஸ் விசேட அதிரடிப் படையின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர, விசேட பணியகத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் தனபால, குற்றப் புலனாய்வுத் திணைக்கள பிரதிப் பொலிஸ் மா அதிபர். குற்றப் பிரிவின் பணிப்பாளர் பிரசாத் ரணசிங்க, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நெவில் டி சில்வா ஆகியோர் சமூகமளித்திருந்தனர்.
ஒழுங்கமைக்கப்பட்ட கிரிமினல் கும்பல்களின் கொலைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் சுமையாக மாறியுள்ளதால், இந்த பேரழிவு நிலையை அடக்கும் வகையில், சம்பந்தப்பட்ட நபர்களின் நிலை என்னவாக இருந்தாலும், அத்தகைய குற்றவாளிகளை சமூகத்திலிருந்து அகற்றுமாறு மூத்த காவல்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் டிரான் அலஸ் உத்தரவிட்டார்.