ரணில் – ராஜபக்ச கூட்டணியே வரும் தேர்தலில் களமிறங்கும்!
“இலங்கையில் இனிவரும் தேர்தல்களில் அனுபவம் வாய்ந்த புதிய கூட்டணி போட்டியிட எதிர்பார்த்துள்ளது. எந்தச் சின்னத்தில் போட்டியிடுவது என்பதை எதிர்காலத்தில் தீர்மானிப்போம்” – என்று நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்
“நாட்டில் தற்போது ரணில் – ராஜபக்ச அரசே இருக்கின்றது. இரு தரப்பும் அனுபவம் வாய்ந்த இரு அணிகள் என்பதால் கூட்டணி அமைப்பில் பிரச்சினை இருக்காது. தற்போது பல கட்சிகளை இந்தக் கூட்டணியில் இணைத்துக்கொள்வதற்கான பேச்சுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தற்போது தங்களுடைய கட்சியின் அரசியல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இனிவரும் எந்தவொரு தேர்தலையும் சந்திக்கத் தயாராக இருக்கின்றோம். தேர்தலிலும் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையும் உள்ளது” – என்றும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்தார்.