பிணை வழங்கப்பட்ட போதிலும் திலினி தொடர்ந்தும் மறியலில்!
திலினி பிரியமாலிக்கு பிணை வழங்கப்பட்டுள்ள போதிலும், பிணைக் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாத காரணத்தால், அவர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தென்னிலங்கையைக் கலக்கிய பாரியளவான நிதி மோசடிக் குற்றச்சாட்டில், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த திலினி பிரியமாலிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த அனைத்து வழக்குகளில் இருந்தும் அவருக்குப் பிணை கிடைத்துள்ளது.
நிதி மோசடி தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த திலினி பிரியமாலி மற்றும் ஜானகி சிறிவர்த்தன ஆகியோர் கடும் பிணை நிபந்தனையின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான வழக்கு நேற்று கொழும்பு கோட்டை நீதிவான் திலின கமகே முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டடது.
இதன்போது குறித்த இருவரும் தலா 50 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும், ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் செல்ல உத்தரவிட்டார்.
பிணையாளர்களின் வசிப்பிடத்துடனான சொத்து உறுதிப்படுத்தலை முன்வைத்தல், வெளிநாட்டுப் பயணத் தடை மற்றும் மாதாந்தம் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகி கையொப்பமிடல் போன்ற நிபந்தனைகள் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ளன.