வீடு தீப்பிடித்ததில் 2 குழந்தைகள் உட்பட 6 பேர் பலி.. திட்டமிட்ட சதியா? தெலங்கானா போலீசார் தீவிர விசாரணை

தெலுங்கானா மாநிலம் மஞ்ரியல் மாவட்டத்தில் நள்ளிரவில் வீடு தீப்பற்றி எரிந்ததில், உள்ளே தூங்கி கொண்டிருந்த 2 குழந்தைகள் உட்பட 6 பேர் தீக்கிரையாகினர்.

தெலுங்கானா மாநிலம் மஞ்ரியல் மாவட்டம் ராமகிருஷ்ணபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் சிவையா (50), பத்மபதியா (45) தம்பதியினர். அவர்களது வீட்டிற்கு நேற்று உறவினர்கள் சந்தையா (40), மௌனிகா (35), ஸ்வீட்டி (4), ஹீம பிந்து (2) ஆகியோர் வந்திருந்தனர். வீட்டில் இருந்த 6 பேரும் நேற்று இரவு சாப்பிட்ட பின், படுத்து தூங்கி கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் நள்ளிரவு வேலையில் வீடு திடீரென்று தீப்பற்றி எறிய தொடங்கியது. இதனை கண்டு அருகில் வசிப்பவர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அதற்குள் வீடு முழுவதுமாக எரிந்து வீட்டில் தூங்கி கொண்டிருந்த 6 பேரும் உடல்கள் கருகி உயிரிழந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்து அங்கு வந்து சேர்ந்த மஞ்சிரியாலா போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீ விபத்திற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். 6 பேரும் வீட்டில் தூங்கி கொண்டிருக்கும்போது யாராவது கதவை தாழிட்டு வீட்டிற்கு தீ வைத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.