தமிழகத்தின் தலைநகர் சென்னை விமான நிலையத்தில் 2 இலங்கை பெண்கள் கைது! வெளிவந்த காரணம்

சென்னையில் இருந்து போலி பாஸ்போர்ட்களில் யாழ்ப்பாணம் செல்ல முயன்ற 2 இலங்கை பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை பெண்கள்
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இருந்து போலி பாஸ்போர்ட்களில், யாழ்ப்பாணத்திற்கு 2 இலங்கை பெண்கள் செல்ல முயன்றுள்ளனர். இதையடுத்து அந்த இரண்டு இலங்கை பெண்களையும் சென்னை விமான நிலையத்தில், குடியுரிமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கைது நடவடிக்கையை தொடர்ந்து இரண்டு பெண்களும் சென்னை குற்றப்பிரிவு பொலிசில் ஒப்படைக்கப்பட்டனர்.
குற்றப்பிரிவு பொலிசாரிடம் ஒப்படைப்பு
மேல் நடவடிக்கையாகவே குற்றப்பிரிவு பொலிசில் இருவரும் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
விசாரணைக்கு பின்னர் இது தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.