யாழ். ஆயருடன் இலங்கைத் தூதுவர் குழு சந்திப்பு!

யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் பேனார்ட் ஞானப்பிரகாசம் ஆண்டகையை இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி வெளிநாட்டுக்குப் புதிதாக நியமனம் செய்யப்பட்ட தூதுவர் குழு சந்தித்துக் கலந்துரையாடியது.
யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்தில் இன்று பிற்பகல் ஒரு மணியளவில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
பிரான்ஸ், பஹ்ரைன், வியட்நாம், ஜேர்மனி, லெபனான், இஸ்ரேல், எதியோப்பியா, பிலிப்பைன்ஸ், ஜோர்தான், ஆஸ்திரேலியா, ஜக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா ஆகிய 12 நாடுகளுக்குப் புதிதாக இலங்கை அரசால் நியமிக்கப்பட்ட தூதுவர் குழுவே இந்தச் சந்திப்பில் ஈடுபட்டது.
இதன்போது வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
வடக்குக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தூதுவர் குழு பல்வேறு சந்திப்புக்களில் ஈடுபட்டு வருகின்றது.