மாணவர்களை இலக்குவைத்து கஞ்சா கலந்த மாவா விற்பனை – யாழில் ஒருவர் கைது.

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து கஞ்சா கலந்த மாவா போதைப் பாக்கை விற்பனை செய்து வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 3.5 கிலோகிராம் எடையுடைய கஞ்சா கலந்த மாவா போதைப் பாக்கு கைப்பற்றப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த நபர் நீண்ட காலமாக மாணவர்களை இலக்கு வைத்துப் போதைப் பாக்கு விற்பனையில் ஈடுபட்டு வந்தவர் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அவரிடம் மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.