ஹங்வெல்ல வர்த்தகரின் கொடூர கொலைக்கான காரணம் அம்பலம்!

ஹங்வெல்ல வர்த்தகரின் கொடூர கொலைக்கான காரணம் அம்பலம்!
ஹங்வெல்ல பள்ளிவாசலுக்கு அருகில் உணவக உரிமையாளரான 48 வயதான மொஹமட் ஃபருஷான் (48) என்பவர் கொடூரமான முறையில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் தற்போது டுபாயில் வசிக்கும் பாதாள உலக குற்றவாளி ஒருவரினாலேயே மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த தொழிலதிபரின் கொலையின் பின்னணியில் துபாயில் வசிக்கும் லலித் என்ற குற்றவாளி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்த மொஹமட் ஃபருஷான் என்ற வர்த்தகர் வீட்டில் அண்மையில் திருட்டு நடந்துள்ளதாகவும், அவர் திருட்டில் ஈடுபட்டவர்களை அடித்து உதைத்து போலீசாரிடம் சிக்க வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஹங்வெல்ல பிரதேசத்தில் திருட்டு மற்றும் ஏனைய குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் டுபாயை சேர்ந்த லலித்தின் சீடர்களே என்பதும் ,இந்த திருட்டில் ஈடுபட்டவர்கள், தாக்குதலுக்கு பழிவாங்கும் நோக்கமாக இந்த கொலை நடந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று (18ம் தேதி) இரவு கொலை நடந்த சில நிமிடங்களில், லலித் டுபாயிலிந்து இறந்த தொழிலதிபரின் சகோதரருக்கு போன் செய்து உனது சகோதரனுக்கு என்ன நடந்தது என்று போய் பார்க்கும்படி கூறியதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.