ரஃபேல் வாட்ச் : ரசீதை இன்று மாலைக்குள் வெளியிடுவாரா? – அண்ணாமலைக்கு செந்தில்பாலாஜி விடுத்த கெடு!

ரஃபேல் வாட்ச்சிற்கான பில்லை இன்று மாலைக்குள் வெளியிடுவாரா என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு சவால் விடுத்துள்ளார்.

ரஃபேல் வாட்ச் மீதான வார்த்தை போர் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் அண்ணாமலைக்கும் இடையே தீவிரமடைந்து வருகிறது. இதனிடையே இன்று செய்தியாளர்களை சந்தித்த செந்தில் பாலாஜி, “தமிழக அரசு பல துறைகளில் சிறப்பாகவும் வெளிப்படையாகவும் செயல்பட்டு வருகிறது. மின்சாரத்துறை மீதான குற்றச்சாட்டுகளில் உண்மை இருந்தால், அதை சரி செய்ய மின்சார வாரியம் தயாராக உள்ளது. பாஜக தலைவர்கள் ஆதாரம் இல்லாமல் தமிழக அரசிற்கு எதிராக பேசி வருகிறார்கள்.

அண்ணாமலையின் ரஃபேல் வாட்ச் வாங்கியதற்கான பில்லை தான் நான் வெளியிட சொன்னேன். அவரது சொத்து பட்டியல் தேர்தலுக்கு முன்னரே அவர் தாக்கல் செய்திருப்பார். அவர் அந்த வாட்ச்சை தேர்தலுக்கு முன் வாங்கினாரா, பின் வாங்கினாரா என்பது முக்கியமல்ல. அவர் வாங்கினரா அல்லது யாராவது வெகுமதியாக கொடுத்தார்களா என்பது தான் முக்கியம்.

மடியில் கனம் இருந்தால் வழியில் பயம் இருக்காது. அவர் மடியில் கனம் உள்ளது. இன்று மாலைக்குள் அந்த கை கடிகாரத்திற்கான ரசீதை அண்ணாமலை வெளியிட வேண்டும். நான் அவரின் வாட்ச்சிற்கான பில்லை கேட்ட பிறகு, அந்த பில்லை தயாரிக்கும் வேலை நடைபெற்று வருகிறது என்று அறிகிறேன். முதலில் அவர் அந்த பில்லை வெளியிடட்டும். அதற்கு பிறகு அடுத்தகட்ட குற்றச்சாட்டு என்ன என்பதை கூறுகிறேன்.” என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.