ஜனவரி 5ஆம் திகதி முதல் யாழ்தேவி அனுராதபுரம் வரை மட்டுமே செல்லும்.
யாழ்தேவி எதிர்வரும் ஜனவரி 5ஆம் திகதி முதல் 5 மாதங்களுக்கு யாழ்ப்பாணம் செல்லாமல் அனுராதபுரம் வரை மட்டுமே செல்லும் என தெரிவிக்கப்படுகிறது.
அநுராதபுரம் – வவுனியா புகையிரதப் பகுதி திருத்தப்பணிகளுக்காக அக்காலப்பகுதியில் போக்குவரத்துக்கு மூடப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஜனவரி 5ஆம் திகதி முதல் ஐந்து மாதங்களுக்கு கொழும்பு கோட்டைக்கும் அனுராதபுரத்திற்கும் இடையில் மட்டுமே ரயில்கள் இயக்கப்படும்.
அநுராதபுரத்தில் இருந்து வவுனியா வரை பயணிகளின் வசதிக்காக பேருந்துகளும், காங்கேசன்துறையிலிருந்து முறுக்கண்டி வரை இயங்கும் ‘யாழ் ராணி’ புகையிரதம் வவுனியாவிற்கும் முருக்கண்டிக்கும் இடையில் இதே ஐந்து மாதங்களில் சேவையில் ஈடுபடவுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.