கலிபோர்னியாவில் 6.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் வடக்கு பகுதியில் ஹம்போல்ட் கவுன்டி பகுதியில் யுரேகா என்ற இடத்திற்கு அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த நிலநடுக்கம் 16.1 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. பெர்ன்டேல் என்ற பகுதியில் இருந்து மேற்கே-தென்மேற்கே 7.4 மைல்கள் பரப்பளவிற்கு நிலநடுக்கம் தாக்கியுள்ளது.
இதனால் ஆயிரக்கணக்கானோர் வீடுகளில் மின் வினியோகம் துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. நிலநடுக்கத்தால் வீடுகளின் ஜன்னல்கள் உடைந்து சிதறின. வீட்டிலிருந்த பொருட்கள் தூக்கி எறியப்பட்டன. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின.