தினேஷ் ஷாப்டரின் கொலையாளி இன்றோ நாளையோ கைதாகலாம்!
தினேஷ் ஷாப்டரின் கொலையாளி பற்றிய தகவல் தெரியவந்துள்ளது ! கொலை விசாரணையை தவறாக வழிநடத்தும் முயற்சிகளும் நடந்துள்ளன! சந்தேக நபரை தேடி 24 மணி நேரமும் உளவு பணியில் ஈடுபட்ட புலனாய்வுத் துறையினர்! இன்றோ நாளையோ குற்றவாளி கைதாகலாம்!
ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளராக இருந்த தினேஷ் ஷாப்டரின் கொலை தொடர்பான தொலைபேசி ஆய்வுகள் நிறைவடைந்துள்ள நிலையில், சந்தேகநபரை கைது செய்ய முடியும் என குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற மற்றும் கொலைப் புலனாய்வுப் பிரிவு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
சந்தேகத்திற்குரிய நபரின் நடத்தையை முன்னும் பின்னும் அவதானித்து வரும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் அவரைக் கைது செய்யவோ அல்லது விசாரணை செய்யவோ இல்லை, ஏனெனில் அவருக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.
தொலைபேசி பகுப்பாய்வு மூலம் ஆதாரங்கள் தெளிவாகத் தெரிந்த பின்னர் அவரைக் கைது செய்யத் தயங்க மாட்டோம் என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கொலை விசாரணையை தவறாக வழிநடத்தவும் இந்த நபர் முயற்சித்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் குற்றம் இடம்பெற்ற போது சந்தேகநபர் தங்கியிருந்த இடங்கள் தொடர்பில் தீவிர கவனம் செலுத்தி விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
இந்தக் குற்றத்தை இவரே செய்திருந்தால் இதில் அவருக்கு உறுதுணையாக இருந்தவர்கள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள முடியும் எனவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.