கோரவிபத்து முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் பலி.

மட்டக்குளியில் கோர விபத்து – இருவர் பலி!
கொழும்பு, மட்டக்குளியில் இன்று (2) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர். அத்துடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
ஆட்டோவில் பயணித்த இருவரே பலியாகியுள்ளனர். காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
லொறியொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோக்கள்மீது மோதுண்டதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.