மூக்கு வழி கொரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு அனுமதி..

இந்தியாவில் புதிய கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்தியாவில் 2021ஆம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் வி, கோவாவாக்ஸ் உள்ளிட்ட தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதுவரை 200 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தற்போது பிஎஃப். 7 வகை கொரோனா வைரஸ் சீனாவில் பரவ ஆரம்பித்துள்ளதால், அதற்கான தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இந்தியா தீவிரம் காட்டி வருகிறது. மக்கள் முகக்கவசம் அணியவும், கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக மீண்டும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்படுகின்றன.

இந்த நிலையில் நாசல் கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. heterologous booster- ஆக பயன்படுத்தப்படவுள்ள இந்த தடுப்பூசி நாடு முழுவதும் இன்று முதல் தடுப்பூசி முகாம்களில் பயன்பாட்டுக்கு வருகிறது. முதற்கட்டமாக தற்போது தனியார் மருத்துவமனைகளில் மட்டும் இந்த தடுப்பூசி கிடைக்கும் எனவும் தகவல்கள் கூறுகின்றன.

heterologous booster என்றால் என்ன?

முதல் மற்றும் இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. பூஸ்டர் டோஸை homologous boosting, heterologous boosting என இரண்டு வகையாக பிரித்துள்ளனர். இரண்டு தவணைக்கு ஒரே கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டவர்களுக்கு homologous boosting எனப்படும் அதே தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

இரண்டு தவணைகளில் வெவ்வேறு வகையான கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டவர்களுக்கு heterologous boosting எனப்படும் வேறு வகையான தடுப்பூசி வழங்கப்படுகிறது. இதில் இரண்டாவது வகையான heterologous boosting-க்கு நாசல் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.