வெற்றி பெற்றது கலைமகள் வி க

யாழ்ப்பாண மாவட்ட கரப்பந்தாட்டச் சங்கத்தின் அனுமதியுடன்
தெல்லிப்பளைமின்னலடியாக்கி
(M. A JACKY) விளையாட்டுக்கழகம் முதல்முறையாக. மின்னொளியில் நடத்தும் கரப்பந்தாட்ட சுற்று போட்டித் தொடரில் அச்சுவேலி கலைமகள் விளையாட்டுக் கழக அணி வெற்றி பெற்றது’
நேற்று (செவ்வாய்க்கிழமை) கழக மைதானத்தில் இடம் பெற்ற பி பிரிவினருக்கான முதலாவது ஆட்டத்தில் அச்சுவேலி கலைமகள் விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து கோப்பாய் உதயதாரகை விளையாட்டுக் கழக அணி மோதியது.
மூன்று செற்களைக் கொண்டதாக இடம் பெற்ற இந்த ஆட்டத்தில்
முதல் சுற்றில் அச்சுவேலி கலைமகள் அணி 25:17 என்ற அடிப்படையில் முன்னிலை வகித்து இரண்டாவது சுற்றிலும் அச்சுவேலி கலைமகள் விளையாட்டுக்கழகம் 25:22 என்ற அடிப்படையில் முன்னிலை வகித்து வெற்றி பெற்றது
ஆட்ட நேர முடிவில் 2:0 என்ற செற் கணக்கில் அச்சுவேலி கலைமகள் விளையாட்டுக் கழக அணி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றது.