பேராசையால் சிதைந்து போன ரஜினியின் கூட்டணி..
சூப்பர் ஸ்டார் இப்போது ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கி வரும் அந்த திரைப்படம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. முத்துவேல் பாண்டியன் என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரஜினி இந்த படத்தில் முழு ஆக்சன் ஹீரோவாக நம்மை மிரட்ட இருக்கிறார். இதை அடுத்து அவர் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்க இருக்கிறார்.
அந்தப் படத்தை டான் திரைப்படத்தின் மூலம் பிரபலமான சிபி சக்கரவர்த்தி தான் இயக்க இருந்தார். அதற்காக அவர் கதை கூட தயார் செய்து ரஜினியிடம் கூறினார். ஆனால் இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை இப்போது அவருக்கு பதில் லவ் டுடே பிரதீப் அந்த வாய்ப்பை கைப்பற்றி இருக்கிறார். சமீபத்தில் அவரை சந்தித்த லைக்கா நிறுவனர் ரஜினிக்காக கதை சொல்லும் படி கேட்டுள்ளாராம்.
இதனால் பலருக்கும் சிபி சக்கரவர்த்தி ஏன் சூப்பர் ஸ்டாரின் படத்தை இயக்கவில்லை என்ற குழப்பம் இருந்தது. தற்போது அத்தனை கேள்விகளுக்குமான விடை கிடைத்துள்ளது. என்னவென்றால் டான் திரைப்படத்தை இயக்கும்போது அவர் லைக்காவிடம் 25 லட்சம் சம்பளமாக பெற்றிருக்கிறார். அதை தொடர்ந்து அடுத்த படத்திற்கு ஆறு கோடி சம்பளம் தருகிறோம் என ஒரு அக்ரீமெண்ட்டை லைக்கா நிறுவனம் போட்டிருக்கிறது.
அதன் பிறகு தான் சூப்பர் ஸ்டாருக்கு அவர் கதை சொல்ல வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள். ஆனால் சிபி சக்கரவர்த்தி தனக்கு 15 கோடி ரூபாய் சம்பளம் வேண்டும் என்று கேட்டு இருக்கிறார். ஒரு படம் மட்டுமே இயக்கி இருக்கும் அவர் இரண்டாவது படத்திற்கு இத்தனை கோடி சம்பளம் வேண்டும் என கேட்டதை பார்த்து கடுப்பான லைக்கா நிறுவனம் அவரை இந்த படத்தை நீங்கள் இயக்கவே வேண்டாம் எனக் கூறி துரத்தி விட்டிருக்கிறது.
அதன் பிறகு லவ் டுடே படத்தின் வெற்றியை பார்த்து பிரதீப் ரங்கநாதனை அழைத்து இப்படத்தை இயக்கும் பொறுப்பை கொடுத்திருக்கின்றனர். அவரும் அதற்காக ஒரு சூப்பர் கதையை தயார் செய்து கூறியிருக்கிறார். அது சூப்பர் ஸ்டாருக்கு மட்டும் பிடித்து விட்டால் நிச்சயம் இவர்களின் கூட்டணி முடிவு செய்யப்பட்டு விடும் என்று திரையுலகில் பேசி வருகின்றனர்.
ஆனால் இந்த விஷயத்தால் பாவம் சிபிச் சக்கரவர்த்தி தான் படும் மன உளைச்சலில் இருக்கிறாராம். இளம் இயக்குனர்கள் பலருக்கும் சூப்பர் ஸ்டாரை இயக்க வேண்டும் என்பது மிகப்பெரிய கனவாக இருக்கிறது. அந்த வகையில் கைக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் தன்னுடைய பேராசையால் அவர் இந்த வாய்ப்பை நழுவ விட்டிருக்கிறார். இப்படி நொந்து போய் இருக்கும் அவர் இனியாவது அவசரப்பட்டு விடக்கூடாது என்ற முடிவில் இருக்கிறாராம்.