பெண்பிள்ளையை பாலியல் இச்சைக்கு உட்படுத்திய லண்டன் தமிழ் வர்த்தகர்
அறியாப் பருவ பெண் பிள்ளையொருவரை பாலியல் இச்சைக்கு உட்படுத்திய தமிழ் வர்த்தகப் பிரமுகருக்கு எதிரான பாலியல் இம்சைக் குற்றச்சாட்டு லண்டன் வூட் கிரீன் கிரவுண் நீதிமன்றில் நிரூபிக்கப்பட்டு உள்ளது.
இவருக்கு எதிரான வழக்கு கடந்த நவம்பர் 28ம் திகதி முதல் 7 நாட்களாக வூட் கிரீன் கிரவுண் நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வந்தது.
நீண்ட விசாரணையின் பின் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் தண்டனைக் காலத்தை அடுத்த அமர்வு நடைபெறும் 2023 ஜனவரி 3ம் திகதி தீர்மானிக்கப்படும் என மெற் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
லண்டனின் வசதிபடைத்த பகுதிகளில் ஒன்றான ஹரோ உள்ளுராட்சிப் பிரிவுக்குள் கொலின்டேல் பகுதியில் இளையவர்களுக்கான இசை, நடனம் ஆகியவற்றை அரங்கேற்றுவது போன்ற கலைத்துறை சார்ந்து தன்னை நிலை நிறுத்திக் கொண்ட பிரமுகராக செயல்பட்டு வந்த பிரேமகுமார் ஆனந்தராஜா என அறியப்படும் இவர், கலை கலாச்சாரத்தை வளர்க்கின்றேன் என்ற பெயரில் ஆனந்தம் கிரியேசன் யுகே என்ற நிகழ்வு ஓழங்கமைப்பு எனும் நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார்.
இவர் ஆனந்தம் கிரியேசன் யூகே என்ற பெயரில் 2015இலிருந்து யூரியூப்பில் சில கலை நிகழ்வுகளைப் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் புங்குடுதீவைப் பூர்வீகமாகக் கொண்ட பிரேமகுமார் ஆனந்தராஜா 1961 பிறந்துள்ளதோடு, யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவருமாவார். தற்போது 61வது வயதையெட்டும் இவர் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட மலேசியப் பெண்ணொருவரை 1990க்களில் மணந்துள்ளார்.
தகவல் : தேசம்நெற்