திடீர் உடல்நல குறைவு….பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து மருத்துவமனைக்கு சென்ற ADK.

ஸ்ரீலங்காவை சேர்ந்தவர் ADK என்கிற தினேஷ் கனகரத்தினம். பாடல் மீது அதிக ஆர்வம் கொண்ட இவர் தமிழகம் வந்து சினிமாவில் வாய்ப்பு தேட .தொடங்கினார்,அப்படிதான் இவருக்கு விஜய் ஆண்டனி இசையில் பாட வாய்ப்பு கிடைத்தது. ஆத்திச்சு என்ற பாடலை பாடி தமிழ் சினிமாவுக்கு பாடகராக அறிமுகம் ஆகினார்.இந்த பாடல் பட்டிதொட்டி எங்கும் பெரும் ஹிட் அடித்தது.இப்பாடலை தொடர்ந்து பலராலும் அறியப்பட்ட ராப் பாடகர் ஆக உருவெடுத்தார் ஏடிகே.அடுத்ததாக தளபதி விஜயின் வேட்டைக்காரன் படத்தில் விஜய் ஆண்டனி இசையில் மீண்டும் ஒரு சின்னதாமரை படத்தில் ராப் வரிகளை பாடி அசத்தினார்.
இவரின் திறமையை தெரிந்துகொண்ட இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இவருக்கு கடல் படத்தில் மகுடி எனும் பாடலை பாட வாய்ப்பு வழங்கினார்,இப்பாடல் பட்டிதொட்டி எங்கும் பெரும் ஹிட் அடித்தது.இப்படி தமிழ் சினிமாவின் பல முன்னணி இசையமைப்பாளர்கள் இசையில் பாடி அசத்தியுள்ளார்.ஏடிகே.தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைக்கவே,இதில் கலந்துகொண்டால் தனது திறமையை வெளிக்காட்டி மக்களிடம் எளிதாக அறிமுகமாகி வரவேற்பினை பெறலாம் என நிகழ்ச்சிக்கு வர ஒப்புக்கொண்டார்.
நிகழ்ச்சியில் தனது சிறப்பான விளையாட்டினை விளையாண்டு அசத்தி வருகிறார் இவர்.இவருக்கு பல ரசிகர்களும் உருவாகியுள்ளனர் என்று தான் கூற வேண்டும். வாரம் தோறும் வெளியே செல்ல நாமினேட் ஆகினாலும் அவரது ரசிகர்கள் அவருக்கு ஓட்டுக்களை போட்டு காப்பாற்றி விடுவார்கள்.தற்போது ஏடிகே நிகழ்ச்சியில் விளையாடி கொண்டிருக்கும் பொழுது அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது,இதனால் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி மருத்துவமனையில் அனுமதி ஆகியுள்ளார்.இது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது