7500 ஏக்கரில் கஞ்சா சாகுபடி.. 2 லட்சம் கிலோ.. மூட்டை மூட்டையாக எரிக்கப்பட்ட போதைப்பொருள்!
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே 2 லட்சம் கிலோ கஞ்சா தீ வைத்து எரிக்கப்பட்டது.
விசாகப்பட்டினம் வனப்பகுதிகளில் தொடர் சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர், 7 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவிலான கஞ்சா தோட்டங்களை அழித்தனர். அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 2 லட்சம் கிலோ எடையுள்ள கஞ்சாவை, விசாகப்பட்டினத்தை அடுத்துள்ள கோடூர் பகுதியில் குவித்து வைத்தனர்.
காவல்துறை உயர் அதிகாரிகள் முன்னிலையில், குவியல் குவியலாக வைக்கப்பட்ட கஞ்சாவை காவலர்கள் தீ வைத்து கொளுத்தினர். அவற்றின் கஞ்சாவின் மதிப்பு 250 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாகபட்டினம் வனப்பகுதியில் இன்னும் 650 ஏக்கர் வரை கஞ்சா தோட்டங்கள் இருப்பதாக கூறும் காவல்துறையினர், அவற்றை கண்டறிந்து அழிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினர்.