அமோனியாவை ஏற்றிச் சென்ற ரெயில் தடம் புரண்டு விபத்து.
தென்கிழக்கு செர்பியாவில் அமோனியாவை ஏற்றிச் சென்ற ரெயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. இதில், அமோனியா கொட்டியதில் விஷவாயு பரவி 51 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 பெட்டிகள் கொண்ட இந்த ரெயில் அண்டை நாடான பல்கேரியாவிலிருந்து ஆம்மோனியா வாயுவை கொண்டு சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் அமோனியாவை சுவாசித்த நபர்களில் ஏழு பேரின் உடல் நிலை மோசமானதை அடுத்து, நிஸில் பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, 60,000 பேர் வசிக்கும் அந்நகரில் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டது. மேலும், குடியிருப்பு வாசிகள் தங்கள் வீடுகளுக்குள் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். ரெயில் தடம் புரண்டு ஏற்பட்ட விபத்தில், உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.