கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்கா செல்லவில்லை
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் ஐவர் இன்று அமெரிக்கா சென்றுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் முற்றிலும் பொய்யானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று அதிகாலை கோத்தபாய ராஜபக்ச, மனைவி அயோமா ராஜபக்ஷ, மகன் மனோஜ் ராஜபக்ஷ, மருமகள் எஸ்.டி.ராஜபக்ஷ, பேத்தி டி.எச்.ராஜபக்ச ஆகியோர் டுபாயில் சில தினங்கள் தங்கியிருந்துவிட்டு ஐரோப்பிய நாடு ஒன்றிற்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ராஜபக்ச குடும்பம் விடுமுறைக்காக ஐரோப்பிய நாடு ஒன்றில் சில நாட்கள் தங்கப் போவதாகவும் தெரியவருகிறது.
ஜனாதிபதி அலுவலகத்தை விட்டு வெளியேறிய பின்னர், கோட்டாபய ராஜபக்ஷ மாலைதீவு மற்றும் சிங்கப்பூரில் இருந்த காலத்தில் அமெரிக்க விசாவைப் பெற முயற்சித்தார், ஆனால் அதில் தோல்வியடைந்தார். அவர் தனது மனைவியின் அமெரிக்க குடியுரிமை மூலம் கணவன் என்ற நிலையில் அமெரிக்கா செல்வதற்கு முயற்சி செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக அவர் தனது அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்திருந்தார்.