அசீமை போல அப்படியே நடித்து காண்பித்த அமுதவாணன் மகன்…
தமிழில் 5 சீசன்களை வெற்றிகரமாக கடந்து 6வது சீசனில் அடியெடுத்து வைக்கிறது பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சி அக்டொபர் 9ஆம் தேதி முதல் தொடங்கி உள்ளது.
100 நாட்கள் 20க்கும் அதிகமான போட்டியாளர்கள் கலந்து கொண்டு போட்டிபோட்டு இறுதியில் வெல்பவருக்கு 50 லட்சம் பணமும் பிக் பாஸ் டைட்டிலும் வழங்கப்பட்டு வருகிறது.இந்த நிகழ்ச்சி தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம்,ஹிந்தி போன்ற மொழிகளிலும் அங்குள்ள நடிகர்களை வைத்து நடத்தப்பட்டு வருகிறது.தமிழில் இந்த நிகழ்ச்சிக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.
தற்போது 6வது சீசன் எப்பொழுது துவங்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்து இருந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து,அசல்,ஷிவின் கணேசன்,அசீம்,ராபர்ட் மாஸ்டர்,ஆயிஷா, ஷெரினா,மணிகண்டன், ரஷிதா,ராம் ராமசாமி,ஏடிகே அமுதவாணன், ஜனனி,சாந்தி,விக்ரமன் மகேஸ்வரி ,கதிரவன்,குயின்சி, நிவா தனலட்சுமி, ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்,முதல் எலிமினேஷனாக சாந்தி மாஸ்டர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.
இரண்டாவதாக அசல் வெளியேறினார். மூன்றாவதாக ஷெரினா வெளியேறியுள்ளார். நான்காவதாக மகேஸ்வரி வெளியேறியுள்ளார். ஐந்தாவதாக நிவாஷினி வெளியேறியுள்ளார். ஆறாவதாக ராபர்ட் மாஸ்டர் வெளியேறியுள்ளார்.ஏழாவதாக குயின்சி, எட்டாவதாக ராம் வெளியேறியுள்ளார், ஒன்பதாவதாக ஆயீஷா வெளியேறியுள்ளார், பத்தாவதாக ஜனனி வெளியேறியுள்ளார். பதினொராவதாக தனலட்சுமி வெளியேறியுள்ளார்.
தற்போது இன்றைய புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி. இந்த ப்ரோமோவில் இந்த வாரம் freeze டாஸ்க் நடத்தப்பட்டுள்ளது.இதில் அமுதவாணன் குடும்பத்தை சேர்ந்த அவரது மனைவி மற்றும் மகன்கள் அவரை காண பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் வந்துள்ளனர்.அங்கு வந்த அமுதவாணன் மகன் அசீமை போல அப்படியே நடித்து காண்பித்துள்ளார்.இதனை கண்டு அசீம் வியந்து போய் கை தட்டி மகிழ்ந்துள்ள்ளார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.