சீனாவின் பிரதித் தூதுவர் நாளை யாழில்! – நலிவுற்ற குடும்பங்களுக்கு உதவிகள்.

யாழ். குடாநாட்டில் உள்ள நலிவுற்ற குடும்பங்களுக்குச் சீன அரசின் உதவிகள் வழங்கப்படவுள்ளன.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள நலிவுற்ற குடும்பங்களில் ஆயிரத்து 300 குடும்பங்களுக்கு சீன அரசின் உதவிப் பொதிகள் மாவட்ட செயலகத்தில் வைத்து நாளை வழங்கப்படவுள்ளன.
இந்த நிகழ்வில் இலங்கைக்கான சீனாவின் பிரதித் தூதுவர் ஹூ வெய் பங்குபற்றுவார்.
இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் ஏற்பாட்டில் நாளை காலை 9 மணிக்கு வழங்கப்படவுள்ள இந்த உதவித் திட்டத்தில் யாழ்பபாணம் மற்றும் நல்லூர் பிரதேச செயலாளர்களின் பிரிவில் இருந்து தெரிவு செய்யப்பட்ட தலா 50 குடும்பங்கள் வீதம் 100 குடும்பங்களுக்கு முதலில் உதவிப் பொதிகள் வழங்கிவைக்கப்படவுள்ளன.