விது நம்பிக்கை நிதியத்தின் சான்றிதழ் வழங்கல் நிகழ்வு
விது நம்பிக்கை நிதியத்தின் கடந்த 18 ஆண்டுகால செயல் திட்டங்களும் , 19ம் ஆண்டின் புதிய ஆரம்பமாகவும் , வலிகாம வலயத்தில் அரசின் நிகழ்கால சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்ட , “3வயது 10மாதம் நிரம்பிய சிறார்களை முன்பள்ளிகளில் இணைத்தல்” எனும் தொனிப்பொருளிற்கமைய , விசேட தேவையுடைய மாணவர்களை கையாளுகை தொடர்பான முன்பள்ளி ஆசிரியர்களிற்கான பயிற்சி நெறியானது , தேர்ச்சி பெற்ற வளவாளர்களால் நடாத்தப்பட்டு , பயிற்சி நிறைவில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களிற்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வானது இணுவில் மத்திய கல்லூரி ஆரம்ப பாடலையில் , கடந்த டிசம்.24ம் திகதி நடைபெற்றது.
கௌரவ விருந்தினராக மாநகர சபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் கலந்து சிறப்பித்தார்.
சிறப்பு விருந்தினர்களாக இணுவில் மத்திய கல்லூரி அதிபர் இளங்கோவன் துரைசிங்கம் , கருவி நிறுவனம் & வலிகிழக்கு அபிவிருத்தி நிலைய செயலாளர் இ.யசிந்தன் மற்றும், பிரத விருந்தினராக மேலதிக வட மாகாண கல்வி பணிப்பாளர் T.ஜோன் குயின்ரஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
விது நம்பிக்கை நிதியத்தின் பணிப்பாளரும் அறங்காவலருமான நாகேந்திரம் விஜிதா நிகழ்ச்சிக்கு தலைமையேற்றிருந்தார்.